Wednesday, November 25, 2015

தமிழர் வாழ்வியல் கருவூலம் 64 ( பொருட்பால் - அமைச்சியல் -சொல்வன்மை - Power in Speech - Puissance de la parole. 641-650)

பொருட்பால் - அமைச்சியல் -சொல்வன்மை  - Power in Speech - Puissance de la parole. 641-650நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் 
யாநலத்து உள்ளதூஉம் அன்று.641

ஒருவனுக்கு இன்றியமையாத குணங்களுள் சிறந்தது நாவன்மையாம் .அந்த நலம் ஏனைய நலன்களையும் விட மேலான சிறப்புடையது .

எனது கருத்து :

நாக்கை அடக்கினவன் இந்த உலகத்தையே அடக்கியாளுவான் எண்டு எங்கடை பெரிசுகள் தெரியாமலே சொல்லி இருக்கினம். அதாலை குறைச்சு பேசி கூட செய்யிறவனைத்தான் சனத்துக்கு கூட பிடிக்கும் .

A tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.

Qu'ils-les Ministres possèdent ce qui est appelé le don de la langue.
Ce bien ne fait partie d'aucun autre bien.


ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் 
காத்துஓம்பல் சொல்லின்கண்  சோர்வு. 642

ஒருவருக்கு நன்மையும் அழிவும் தம் சொற்களால் ஏற்படும். ஆதலால் அத்தகைய சொற்களை சொல்லுமாறு சோர்வு நேராதவாறு போற்றிக் காக்க வேண்டும்.

எனது கருத்து :

நாக்கு எண்டது கெட்ட சாமான். அதிலை சனி பிடிச்சால் எந்தகொம்பனாய் இருந்தாலும் கவிண்டு கொண்டிண்ட வேண்டியதுதான். இப்ப சுமந்திரன் வாயை குடுத்து புண்ணாக்கிற மாதிரி.

Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend. 

Parce que la Fortune et la misère proviennent d'elle-la langue qu'ils se gardent des fautes de la langue.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
வேட்ப மொழிவதாம் சொல்.  643

கேட்பவர் உள்ளத்தை கவரும் தன்மை கொண்டதாகவும் ,கேளாதவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும் .

எனது கருத்து :

வள வளா கொள  கொளா இல்லாமல் சொல்ல வந்ததை மனசிலை தைக்கிறமாதிரி எதிராளியையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி பேசுறவனை சுத்தி எந்தநேரமும் சனம் இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் இப்பத்தையான் அரசியல் வாதியளிட்டை கூட இருக்கு ஆனால் செயல் எண்டு பாத்தால் ஒண்டும் இல்லை .

'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear. 


Le vrai discours est celui qui a la qualité d'affermir ceux qui ont écouté et approuvé, de faire revenir de leur opinion, ceux qui n'ont pas écouté ou approuvé.


திறன்அறிந்து சொல்லுக சொல்லை; அறனும் 
பொருளும் அதனின்ஊங்கு இல். 644 

சொல்லின் திறத்தை அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும் அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை .

எனது கருத்து :

ஒண்டை கதைக்க முதல் அதைப்பத்தி தறோவாய் கிளியர் பண்ணி போட்டுத்தான் கதைக்க வேணும். அப்பத்தான் ஒருத்தரும் திருப்பி கதைக்க மாட்டாங்கள். ஆனால் இப்ப இந்த அரசியல் வாதியள் நேற்று என்ன சொன்னது எண்டதை அடுத்தநாள் மறந்து போறாங்கள். 

Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great. 

Qu'ils parlent, en connaissance de leur talent et de la capacité d'appropriation des auditeurs. Il n'y a pas de vertu ni de richesse, supérieures à de tel discours.

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல், அச்சொல்லை 
வெல்லும்சொல் இன்மை அறிந்து. 645 

ஒருவர் தாம் சொல்லும் சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லாத வகையில் ஆராய்ந்து அறிந்து அச்சொல்லை சொல்ல வேண்டும் .அதுவே சிறந்த சொல்வன்மையாகும் .

எனது கருத்து :

ஒரு சொல்லுக்கு வேறை சொல்லு வராமல் கதைக்க வேணும் எண்டு சொல்லுறியள். ஆனால் தமிழ் அப்பிடியே கிடக்கு? ஒரு சொல்லுக்கு எத்தினை அர்த்தங்கள் கிடக்கு ஐயன் .

Speak out your speech, when once 'tis past dispute
That none can utter speech that shall your speech refute. 

Qu'ils parlent, mais qu'au  préalable, ils recherchent et sachent, 
s'il n'y a pas un autre discours pouvant détruire les effets du leur.

வேட்பத்தாம்  சொல்லி, பிறர்சொல் பயன்கோடல் 
மாட்சியின் மாசு அற்றார் கோள். 646 

பிறர் விரும்பும்படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் குற்றமற்றவரது கொள்கையாகும் .

எனது கருத்து :

இங்கைதானே பிரச்சனையே தொடங்குது. எல்லாரும் தாங்கள் சொல்லுறதுதான் சரி அதை மற்றவனும் கேக்கவேணும் எண்டுதான் நினைக்கினமே ஒழிய மற்றவன் என்ன சொல்ல வாறான் எண்டதை கேக்கிறதுக்கு றெடி இல்லை. இதுக்கு வேறை கலந்துரையாடல் எண்டு பேரும் வைப்பாங்கள் ஐயன் .

Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence. 

Parler de manière  à se faire  désirer  par l'auditoire et saisir le vrai sens des répliques d'autrui: tel est le rôle du ministre impeccable.

சொலல்வல்லன் சோர்வுஇலன், அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647 

சொல்வன்மை உடையவனாயும் ,சொற் சோர்வு இல்லாதவனாயும் சபைக்கு அஞ்சாவனாயும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் முடியாது .

எனது கருத்து :

நீங்கள் சொல்லுறது சரிதான் .வாய் இருந்தால் வங்காளம் போகலாம் எண்ட பழமொழியும் இருக்குத்தான். ஆனால் அதுக்கும் ஒரு மறுத்தான் இருக்கு கண்டியளோ .அதுதான் வாயாலை வெல்லாட்டி பின்னாலை இருந்து முதுகிலை குத்திறது, சேறடிக்கிறது, துரோகி பட்டம் குடுக்கிறது எண்டு கனக்க விசயங்களை  எங்கடை பெடியள் இப்ப வைச்சிருக்கிறாங்கள் ஐயன் உது இப்ப செல்லாது .

Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach. 

Il est difficile de vaincre par la ruse celui qui a la puissance de la parole, que rien ne trouble et qui brave l'auditoire.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்; நிரந்துஇனிது 
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 

சொல்லும் காரியங்களை வரிசைப்படக் கோத்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால் ,இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏற்றுக்கொள்ளும் .

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் அவையின்ரை தோற்ரம் கிட்ட வரவிடாமல் வெருட்டும். ஆனால் அவையின்ரை கதையை கேட்டு நடக்கிறதுக்கு சனம் லைன் கட்டி நிக்கும். இதைத்தான் ஊரிலை சொல்லுவாங்கள் "முகராசி " எண்டு ஐயன். 

Swiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound. 

Le Monde s'empresse d'approuver ceux qui ont le talent de coordonner leurs idées et d'employer un langage persuasif.

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற 
சிலசொல்லல் தேற்றா தவர். 649 

குற்றம் இல்லாத சொற்களாகச்  சிலவற்றைப் பேசத் தெரியாதவரே , நீண்ட நேரம் பல சொற்களைப்  பேச ஆசைப்படுவர் .

எனது கருத்து :

இவையள் தரவளியை நீங்கள் அரசியல் மேடையிலை இல்லாட்டில் வேறை மேடையிலையும் பாக்கலாம். கதைக்கிறதுக்கு ஒண்டும் இருக்காது ஆனால் தும்பு முட்டாஸ் சுத்தி காது கன்னம் எல்லாம் ரத்தம் வரப்பண்ணுவாங்கள். 

Who have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man's ears to pain. 

Seuls, ceux qui ne savent pas exprimer en peu de mots impeccables,
des idées claires, désirent parler prolixement.

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது 
உணர விரித்துரையா தார். 650 

தாம் கற்ற நூற்பொருளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர் ,கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் பரப்பாத மலரைப் போன்றவர்களாவர் .  

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் பேருக்கு பின்னாலை ஒரு ஏழெட்டு பட்டங்கள் அடுக்கி வைச்சிருப்பினம். எங்கை அவையை மேடையிலை எத்தி விடுங்கோ. வேர்த்து கொட்டி சொல்ல வந்ததை ஒழுங்கு முறையாய் சொல்லத்தெரியாமல் முழுசுவினம். இவையளுக்கு இருக்கிறது கொமினிக்கேசன் பிரச்சனை கண்டியளோ. இவையளாலை ஒரு பிரயோசனமும் இல்லை.
Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound. 


Ceux qui ne peuvent pas développer les connaissances qu'ils ont acquises par leurs études, de manière à les faire comprendre, ressemblent à la fleur épanouie mais qui n'a pas de parfum.

Sunday, June 21, 2015

தமிழர் வாழ்வியல் கருவூலம் 63 ( பொருட்பால் - அமைச்சியல் -அங்கவியல் - The Office of Minister of state- Des Ministres. 631-640)

பொருட்பால் - அரசியல் - அமைச்சு-அங்கவியல் - The Office of Minister of state- Des Ministres. 631-640


கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 
அருவினையும் மாண்டது அமைச்சு.631

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும் ,ஏற்ற காலத்தையும் ,செய்யும் வகையையும் செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன் .

எனது கருத்து :

இப்பிடியான சிந்தனையள் இப்ப ஒரு அமைச்சருக்கு இருக்கெண்டால் அந்த அமைச்சர் ஒரு வெங்காயம் எண்டுதான் சொல்லுவினம். இப்பத்தையான் அமைச்சருக்கு இருக்கிற மெயின் நோக்கம் சிந்தனையெல்லாம், தான்  லெக்சனிலை போட்ட காசை எப்பிடி எடுக்கிறதெண்டும் , எப்பிடி எட்டு தலைமுறைக்கும் சொத்துபத்து சேக்கிறதெண்டிலையும்  தான் கண்டியளோ .


A minister is he who grasps, with wisdom large,
Means, time, work's mode, and functions rare he must discharge.

Celui-là est ministre qui est capable de bien discerner  les moyens, l'opportunité et la   manière de mener une entreprise et de s'acquitter de ces délicates fonctions.

வன்கண் குடிகாத்தல் கற்றுஅறிதல் ஆள்வினையோடு 
ஐந்துடன் மாண்டது அமைச்சு.632

அஞ்சாமையும் ,குடிப்பிறப்பும்,காக்கும் திறனும்,கற்றுணர்ந்த அறிவும் ,முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் உடையவனே அமைச்சன் .

எனது கருத்து :

இந்தக் காலத்திலை ஆர் ஐயா இப்படியான அமைச்சர் இருக்கினம் ? தங்களுக்கு வேண்டப்பட்ட குடிகளை பதுக்காக்கிறதிலையும், அவையளுக்கு துணிவாய் வேலை செய்யிறதிலையும் தான் இப்பத்தையான்  பெரும்பாலான அமைச்சர்மாரின்ரை பொழுதுகள் போகுது. மற்ற குடிகள் எல்லாம் இவைக்கு தேவை இல்லாத குடிகள். ஆனால் இவை தரவளி லெக்சன் நேரத்திலை மட்டும் காலுக்கை விழுந்து கிடப்பினம். 

A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.

Voici les cinq qualités nécessaires à un ministre : l'énergie dans l'action, la protection des  sujets, l'étude du Droit, la connaissance du licet et du non licet, l'effort.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்லது  அமைச்சு.633

பகைவரோடு சேர்ந்துள்ளோரைப் பிரித்தலிலும் ,தம்மைப் பிரிந்து போகாமல் காத்தலிலும் ,பிரிந்து போனோரை முயன்று மீண்டும் செர்த்தளிலும் வல்லவன் அமைச்சன்.

எனது கருத்து :

எனக்கொரு ஐமிச்சம் ஐயா .பகைவரோடை சேர்ந்து இருக்கிறவையை பிரிக்கிறது மொள்ளமாரி வேலை இல்லையோ ? இதைத்தானே ஊரிலை இருக்கிற அமைச்சர்மார் கொஞ்சப்பேர் செய்து எங்களை கந்தறுந்து போகச்செய்தினம்.


A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

Est ministre, celui qui est habile à faire naître la scission parmi les alliés de l'ennemi, à  conserver l'union parmi ses alliés (au moyen des dons et des paroles agréables) et à pardonner à ceux qui se sont séparés de lui.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு. 634

செய்யத்தக்க செயலை ஆராய்தலிலும் ,அதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செய்தலிலும் ,துணிவாகக் கருத்தைச் சொல்லுதலிலும் வல்லவன் அமைச்சன். 

எனது கருத்து :

உது இப்ப செல்லாது ஐயா .காசு எந்தப்பக்கம் இருக்குதோ அந்தப்பக்கம் தான் அமைச்சரின்ரை ஞாயப்பிளப்பும் இருக்கும். இதை எங்கடை பரம்பரையிலேயே கண்டு போட்டம் .


A minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word.

Est ministre, celui qui a l'habileté de faire un choix parmi les moyens d'agir en connaissance de cause, et de prononcer les paroles qui engagent à le croire.

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்  
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை.635

நீதி நெறிகளைத் தெரிந்து ,பொருள் நிறைந்த சொல்லை உடையவனாய் ,எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய் உள்ளவனே அரசனுக்கு துணையாவான். 

எனது கருத்து :

இப்பவெல்லாம் அமைச்சர்மாருக்கு இருக்கிற ஒரே பிரச்சனை என்னவெண்டால், அரசனுக்கு எப்பிடி எப்பிடி செம்பு தூக்கலாம் அதாலை தன்ரை பதவியை எப்பிடி வைச்சிருக்கலாம் எண்ட யோசினையாலை இந்த அமைச்சர்மாருகளுக்கு ஒழுங்கான நித்திரை தண்ணிவென்னி இல்லைப் பாருங்கோ .


The man who virtue knows, has use of wise and pleasant words.
With plans for every season apt, in counsel aid affords.

Est conseiller qualifié (du Roi), celui qui connaît les actes vertueux pratiqués (par le Roi), qui a des paroles pleines de savoir et qui connaît les moyens d'agir propres à chaque temps.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் 
யாவுள முன்நிற் பவை.636

இயல்பான நுண்ணறிவும் ,நூல் அறிவும் ஒருங்கே உடையவர்க்கு எதிராக எந்த நுட்பமான சூழ்நிலைகளும் நிற்கமுடியாமல் போகும் .

எனது கருத்து :

எந்த தொடக்கத்துக்கும் ஒரு முடிவெண்டு ஒண்டு இருக்கு .அதுதான் காலம் .இந்தக் காலத்துக்கு முன்னாலை எந்தக் கொம்பனாலையும் நிண்டு பிடிக்கேலாது எண்டதையும் நாங்கள் கண்ணாலை பாத்திட்டம். 

When native subtilty combines with sound scholastic lore,
'Tis subtilty surpassing all, which nothing stands before.

Quels sont donc les problèmes très délicats à résoudre, pour celui qui joint la connaissance des livres à une intelligence naturelle ?

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து 
இயற்கை அறிந்து செயல்.637

நூலறிவால் செயல்களைச் செய்ய அறிந்த போதிலும் உலகத்தின் நடைமுறைகளையும் அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும் .

எனது கருத்து :

இங்கைதான் நீங்கள் நிக்கிறியள். எல்லாருக்கும் தண்ணி காட்டினம், அதாலை எங்களுக்கு மிதப்பு வந்திது. கடைசியிலை நந்திக்கடலோடை எங்கடை முப்பது வரியத்து  கதை முடிஞ்சுது .

Though knowing all that books can teach, 'tis truest tact
To follow common sense of men in act.

Quoique l'on soit consommé dans la connaissance des livres, il faut savoir ce qui se passe dans le monde et y conformer ses actes.

அறிகுஒன்று அறியான் எனினும் உறுதி 
உழைஇருந்தான் கூறல் கடன்.638

அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல் ,தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும் ,அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக் கூறுதல் கடமையாகும் .

எனது கருத்து :

ஐயா........... அரசன் கொடுங்கோலானாய் இருந்து அமைச்சர்மாரை போட்டுத்தள்ளினால் எந்த அமைச்சர்அந்த அரசனுக்கு  இடிச்சு சொல்லுவான் ?? எல்லா அமைச்சரும் உயிருக்கு பயந்து அரசனுக்கு செம்பு தூக்கத்தான் செய்வாங்கள். 

'Tis duty of the man in place aloud to say
The very truth, though unwise king may cast his words away.

Bien que (le Roi) traverse les consesils des connaisseurs et soit lui-même inintelligent, le devoir du ministre est de lui donner toujours et sans se lasser de bons conseils.

பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துஉள் தெவ்வோர் 
எழுபது கோடி உறும்.639

அருகில் இருந்தவாறே அரசனுக்கு தீங்கு நினைக்கும் அமைச்சனை விட ,எழுபது கோடி பகைவர் இருந்தாலும் பாதகமில்லை .

எனது கருத்து :

அமைச்சர்மார் எல்லாரும் அரசியலிலை வியாபாரத்துக்கு எண்டுதான் வாறாங்கள். இதிலை நாட்டுநலம் எண்டது அவனவன் அதிலை எவ்வளவு அள்ளலாம் எண்டதை பொறுத்துத்தான் இருக்கு. பதவியிலை இருக்கும் வரைக்கும் வறுகுமட்டும் வறுகிக்கொண்டு அடுத்தமுறை தோத்தால் வறுகினது அமைச்சருக்கு கை குடுக்கும். இதிலை பகைவர் எண்டதெல்லாம் காசாலைதான் முடிவு செய்யிறது இப்பத்தையான் நடைமுறை. 

A minister who by king's side plots evil things
Worse woes than countless foemen brings.

Il y a sept cent millions d'ennemis dans la personne du ministre qui est près du Roi et qui médite à lui faire du tort.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் 
திறப்பாடு இலாஅ தவர்.640

முறையாக ஆராய்ந்து அறிந்த போதிலும் செயல் திறமை இல்லாத அமைச்சர்கள் முடிவில்லாத செயல்களையே செய்வர் .

எனது கருத்து :

அரசனுக்கு செம்பு தூக்கிற அமைச்சர்கள் இப்ப அரசவையிலை கூடினதாலை, அரசன் எப்பவுமே ஆரும் ஒருத்ததரும் தன்னை ஒண்டும் செய்யேலாது எண்ட  போதையிலை தான் இருப்பான். கடைசியிலை லெக்சன் எண்ட ஒண்டு வரேக்கைதான் அரசனுக்கு இந்த அமைச்சர்மாரும் குடிமக்களும் ஒண்டாய் சேந்து ஆப்படிச்சு போதையை இறக்குவாங்கள்.

For gain of end desired just counsel nought avails
To minister, when tact in execution fails.

Les Ministres qui n'on pas l'énergis de parachever leurs œuvres, les laisseront inachevées bien qu'elles aient été mûrement étudiées.

Tuesday, April 28, 2015

தமிழர் வாழ்வியல் கருவூலம் 62 ( பொருட்பால் - அரசியல் - இடுக்கண் அழியாமை , Hopefulness in Trouble , Ne pas se laisser abattre par le malheur. 621-630)

(பொருட்பால் - அரசியல் - இடுக்கண் அழியாமை  , Hopefulness in Trouble , Ne pas se laisser abattre par le malheur. 621-630)இடுக்கண் வருங்கால் நகுக; அதனை 
அடுத்தூர்வது அஃதுஒப்ப தில். 621 

துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் நகைத்து ஒதுங்குக.அத்துன்பத்தை வெல்வதற்கு அதைப்போன்றது வேறு இல்லை .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு கஸ்ரம் துன்பம் வாற நேரம் சிரிச்சு கொண்டு இருக்கவேணும் எண்டு சொல்லுறது எந்த விதத்திலை ஞாயம் எண்டு கேக்கிறன்?  மற்றவை லூசன் எண்டு சொல்ல மாட்டினமோ? ஒருத்தனுக்கு ஒரு கஸ்ரம் துன்பம் வந்தால் முதலிலை அதை தீக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கோ எண்டுதான் முதலிலை யோசிக்க வேணும் கண்டியளோ .

Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power.

Quand le malheur arrive, il faut s'en  réjouir intérieurement:
il n'y a rien de tel pour le réduire.

வெள்ளத்து  அணைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும். 622

வெள்ளம் போல் துன்பம் பெருகி வருகிறபோது அறிவுடையவன் அதைப் போக்க நினைக்கும் அளவிலேயே அத்துன்பம் இல்லாமல் ஓடிவிடும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு எதையும் வெல்லலாம் எண்ட தில் இருக்க வேணும் தான், அனால் இந்த ஓவர் தில்லே ஒருகட்டத்துக்கு மேலை சம்பந்தபட்ட ஆளையும் முடிச்சுப்போடும். ஒருத்தனுக்கு தில் மட்டும் காணாது. பிரச்சனயை வெட்டியாடிடுற வழியும் தெரிய வேணும். அப்பதான் அவன்ரை தில் எடுபடும். 

Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.

Tous les  maux  qui. comme  l'inondation, sont sans bornes, s'évanouissent, lorsqu'un homme intelligent conçoit un projet, (pour les détruire).

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர். 623 

துன்பம் வரும் போது அதற்காக வருந்திக்கலங்காதவர் அத்துன்பத்துக்கு துன்பம் உண்டாக்கி அதை வென்றுவிடுவர் .

எனது கருத்து :

கடலுக்கை ஒருத்தன் நீந்தி கொண்டிருக்கிற நேரம் சுழி ஒண்டு அவனை இழுக்குது. அவன் சுழியை கண்டு பயப்பிடாமல் கையை காலை அடிச்சால்  கரைக்கு வருவான். இல்லையெண்டால் அவனை ஆராலையும் காப்பாத்தேலாது .

Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.

Ceux qui ne s'affligent pas d'un obstacle (qui empêche le succès d'une entreprise) lui créent un contre obstacle.

மடுத்தவாய்  எல்லாம் பகடு அண்ணான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624

பார வண்டியை இழுத்துச் செல்லும் எருது தடை நேர்ந்த போதெல்லாம் முயன்று இழுத்துச்செல்லும் .அதைப் போல மனம் கலங்காதவனை அடைந்த துன்பம் துன்பப்பட்டு ஓடும் .

எனது கருத்து :

என்னதான் தலைகீழாய் நிண்டு தண்ணி குடிச்சாலும் , காலமும் வேலை செய்தால்தான் ஒருத்தன் தன்ரை ரூட்டிலை வெல்லுவான் .

Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.

Les maux qui s'abattent sur celui qui continue son travail malgré les obstacles, comme le buffle qui avance lentement au milieu des cahots, ont en eux-mêmes, la cause de leur destruction.

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற 
இடுக்கண் இடுக்கண்  படும். 625

மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும் நெஞ்சம் கலங்காதவன் அடைந்த துன்பம் துன்பப்பட்டுப்போகும் .

எனது கருத்து :

அப்ப அடிக்க அடிக்க அம்மியும் நகரும் எண்டு ஏன் சொல்லுறவை ??

When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.

Les maux qui atteignent en foule, se succédant les uns aux autres,
celui  qui ne  lâche pas prise, sont détruits par d'autres maux.


'அற்றேம்'என்று அல்லற் படுபவோ பெற்றேம் என்று 
ஓம்புதல் தேற்றா தவர்.626

செல்வம் வந்தபோது இதை 'பெற்றோமே' என்று பற்றுக்  கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த பொது 'இழந்தோமே' என்று வருந்துவார்களோ ?

எனது கருத்து : 

ஒருத்தன்ரை சீவியத்திலை சேமிப்பு எண்டது வேணும். அந்த சேமிப்பு அந்தரம் ஆபத்திலை கைகுடுக்கும். சேமிப்பு இல்லாட்டில் கவலைப்படத்தான் வேணும் .

Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.

Ceux qui ignorent l'avarice dans la prospérité s'affligeront-ils de leur pauvreté  dans  le malheur ?

இலக்கம் உடம்பு இடும்பைக்குஎன்று கலக்கத்தைக் 
கையாறாக் கொள்ளாதாம் மேல்.627

மேலோர் ,தம் உடம்பு துன்பத்துக்கு இலக்கானது என்று அறிந்து ,துன்பம் வந்தபோது அதற்காக வருந்த மாட்டார்கள் .

எனது கருத்து :

அப்பிடி ஆரும் இருந்தால் காட்டுங்கோ. ஒரு சின்ன பிரச்சனைக்கே அதை ஊதி பெருப்பிச்சு தலைகீழாய் நிக்கறவை தான் இந்தக்காலத்திலை கூட .

'Man's frame is sorrow's target', the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects.

L'homme intelligent qui sait que le corps sert de cible à la douleur,
ne considère pas celle-ci comme telle.

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் 
துன்பம் உறுதல் இலன்.628

இன்பமானத்தை விரும்பாதவனாய் ,துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் ,துன்பம் வந்த போது வருந்த மாட்டான் .

எனது கருத்து :

உண்மைதான் ஐயா. ஆனால் இப்ப அப்பிடியெல்லாம் இல்லை. தனக்கு வாற துன்பங்களை சனத்துக்கு காட்டி அரசியல் செய்யிற அரசியல்வாதியள் கூடின காலம் இப்ப  .

He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.

Celui qui ne désire pas les plaisirs et qui sait qu'il est naturel d'endurer les maux  causés par le Destin, ne souffre jamais de ces maux.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் 
துன்பம் உறுதல் இலன்.629

இன்பம் வரும் போது மகிழ்ச்சி அடையாதவன்,துன்பம் வந்தபோது அத்துன்பத்தைக் கண்டு வருந்த மாட்டான் .

எனது கருத்து :

நல்லாய் இருக்கிற நேரம் கண்கடை தெரியாமல் தலைகீழாய் ஆடுறவையும், கெட்டு நொந்து போய் இருக்கிறநேரம் தங்களை வெளியாலை காட்ட வெக்கப்படுறவையும் தான் இப்ப கூட கண்டியளோ .

Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.

Celui qui jouit, mais sans les désirer, des plaisirs qui lui échoient,
supporte  la douleur quand elle vient, mais n'en souffre pas.

இன்னாமை இன்பம் எனக்கொளின், ஆகும்தன் 
ஒன்னார் விழையும்  சிறப்பு.630

ஒருவன் துன்பத்தையே தனக்கு கிடைத்த இன்பமாக கருதினால் அவனுடைய பகைவரும் அவனைச் சிறப்புடன் விரும்புவர் .

எனது கருத்து :

அப்பிடியெண்டால் சிங்களம் விடுதலை புலிகளை போற்றிப் பாடிக்கொண்டு அல்லோ ஐயா இருக்கவேணும் ?

Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.

Celui qui supporte joyeusement la fatigue de l'effort,
atteint la gloire qui le  fait  exalter par ses ennemis.