பொருட்பால் - அரசியல் - ஊக்கம் உடைமை-Energy- De l'énergie- 590-600.


பொருட்பால்-அரசியல்-ஊக்கம் உடைமை- Energy- De l'énergie-590-600. 













உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார்
உடையது உடையரோ மற்று. 591

ஊக்கம் உடைமையே "உடையவர் " என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது .ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் .

எனது கருத்து: 

சரி ஊக்கம் இருக்கிற ஆக்கள்தான் உடையவர் எண்டால், வேலை வெட்டி இல்லாமல் பரம்பரை சொத்திலை பண்ணையார் விளையாட்டு காட்டுறவையையும் "உடையார்" எண்டுதான் ஊரிலை சொல்லுறவை. அவைக்கு இந்த காசுகள் எங்கை இருந்து வருகுது எண்ட விசையமெல்லாம் தெரியாது. அவையளை எப்பிடி ஊக்கம் உள்ளவை எண்டு எடுக்கிறது ஐயா ?

Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.

Ceux que l'on appelle possédants sont ceux qui ont de l'énergie. Ceux qui n'en ont pas deviendront-ils possédants, quoi qu'ils possèdent autre chose ?

உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். 592

ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலையான செல்வம் .ஏனைய பொருள் வளத்தைப் பெற்றிருந்தாலும் அவை நிலைத்து நில்லாமல் அழிந்து விடும் .

எனது கருத்து: 

மன உறுதியோ காசு பணமோ மட்டும் ஒருத்தனுக்கு இருந்தால் காணாது. அதுக்குமேலை காலம் எண்ட கணக்கும் இருக்குது கண்டியளோ .எங்களுக்கும் எல்லாம் இருந்தும் காலப்பிழையாலை கந்தறுந்து போய் இருக்கிறம். 

The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs.

La possession de l'énergie est une possession durable; celle des autres biens est éphémère.

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593

உறுதியான ஊக்கத்தைத் தம் கைப்பொருளாகக் கொண்டவர்கள், செல்வம் இழந்து விட்ட காலத்திலும் இழந்து விட்டோம் என்று வருந்த மாட்டார்கள் .

எனது கருத்து: 

என்னதான் பிரச்சனை வந்தாலும் பிரையாசி ஒருக்காலும் கிறுங்க மாட்டான் . இதை என்னமொரு வழியாலையும் சொல்லலாம் உழுகிற மாடு எங்கையும் உழும் .

'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.

Ceux qui ont une force de volonté solide, ne perdent pas la tête par la perte de la richesse.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை. 594

தளர்ச்சியிலா ஊக்கம் உடையவனிடம் , செல்வம் வழி கேட்டுக் கொண்டு வந்து சேரும் .

எனது கருத்து: 

காசுபணம் ஊக்கம் உள்ளவனைத்தான் போய் சேருமெண்டால் வேலைவெட்டியில்லாத மொள்ளமாரி முடிச்சவிக்கியளிட்டை எப்படி ஐயா காசுபணம் போய் சேருது ??

The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwell.

La prospérité demanda le chemin et se rend chez celui qui a uns énergie inébranlable.

வெள்ளத்து அணைய மலர்நீட்டம், மாந்தர்தம்
உள்ளத்து அணையது உயர்வு. 595

தண்ணீரிலே மலரும் பூவின் தாளினுடைய நீளம் ,தண்ணீர் உயரத்துக்கு இருக்கும் .அதே போல் மனதில் ஊக்கம் உள்ள அளவுக்கு உயர்வு இருக்கும் .

எனது கருத்து: 

ஐயா நல்ல உதாரணம் தந்திருக்கிறியள் நல்ல விசயம்தான் . ஆனால் சனம் இப்பவெல்லாம் திறந்து பிடிச்சால் காசு கொட்டவேணும் எண்டுதான் நிக்குதுகள். அதாலை இந்த லொட்டோ வெட்டுறது குதிரை ஓடுறது எண்டு சனம் காசைக் கரியாக்குது .

With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

La longueur des tiges des fleurs aquatiques est la mesure de la profondeur de l'eau : ainsi la grandeur est la mesure de la force de volonté de l'homme.

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது
தன்னினும் தன்னாமை நீர்த்து. 596

ஒருவர் தாம் செய்யும் கருதும் எதனையும் உயர்ந்ததாகவே நினைக்கவேண்டும் .அதனை முடிக்க முடியாவிட்டாலும் உயர்வாக எண்ணுவதை விட்டுவிடக் கூடாது .

எனது கருத்து: 

உங்கடை கருத்துக்கு நான் மதிப்பு தாறன் . ஆனால் ஊக்கமே இல்லாமல் கற்பனையிலை ஒண்டை பற்றி கோட்டை கட்டினால் மற்றவங்கள் லூசன் எண்டு சொல்ல மாட்டாங்களோ ??

Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will.

Que la pensée constante (du Roi) aille à son élévation.
Même, en cas d'insuccès, elle devient une qualité naturelle. 

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதைஅம்பின் 
பட்டுப்பாடு ஊன்றும் களிறு. 597

யானை அம்புகளால் புண்பட்டாலும் மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும் . அது போல ஊக்கமுடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்த போதிலும் மனம் தளராமல் தம் பெருமையை நிலைநாட்டுவர்.

எனது கருத்து: 

இது கொஞ்சம் ஓவர் போலைதான் எனக்கு படுகுது யானை அடிபட்டு விழுந்து கிடக்கிற நேரம் அதின்ரை பெரிய உடம்பாலை ஒண்டும் செய்யேலாது. இதே மாதிரி ஒருத்தன் பெரிய இடத்திலை இருந்து இருந்தாபோலை கீழை விழுந்தால் ஒருத்தனும் திரும்பி பாக்கமாட்டான் .

The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.

L'éléphant se tient plus fermement, lorsqu'il est blessé d'une flèche pénétrante: ainsi l'homme énergique maintient sa grandeur sans se laisser abattre par l’insuccès. 

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. 598

ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலத்தாருள் யாம் வன்மையுடையோம்( வள்ளல் ) என்று தம்மைத் தாம் மதித்தலை பெறார் .

எனது கருத்து: 

இண்டையான் காலத்திலை உண்மையை விட பொய் சொல்லிபாருங்கோ பிளைப்பியள். உங்களிட்டை உக்கம் இருக்கோ இல்லையோ எண்டதெல்லாம் உள்பிரச்சனை .

The soulless man can never gain Th' ennobling sense of power with men.

Parmi les habitants de ce monde ceux qui n'ont pas de l'énergie, n’ont pas l'estime de leur propre puissance. 

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599

யானை பருத்த உடம்பை உடையது ;கூர்மையான கொம்புகளை (தந்தங்களை )உடையது .ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும் .

எனது கருத்து: 

யானை எப்பிடிப்பட்டது எண்டு உங்களுக்கு தெரியும். ஆனால் அதுக்கு புலி ஊக்கத்தோடை கிட்ட வந்தால் பயமாம் யானைக்கு மட்டுமே பயம், சிங்கத்துக்கும் தான் பயம் இருந்திது .

Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed.

L'éléphant est le plus gros (des quadrupèdes); il a aussi des défenses effilées ? Il a peur cependant du tigre qu'il rencontre.

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு. 600

ஊக்க மிகுதியே ஒருவனுக்கு திண்ணிய அறிவாகும்.அவ்வூக்கம் இல்லாதவர் மரத்துக்குச் சமமாவர்.மரங்களோடு அவர்குள்ள வேறுபாடு யாதெனில் அவர்கள் உருவத்தால் மக்களாய் இருப்பதேயாகும். 

எனது கருத்து: 

இதைத்தான் பெரிசுகள் எருமையள் எண்டும் ஐஞ்சு சதத்துக்கும் பிரையோசன்மில்லாதவங்கள் எண்டும் கோபத்திலை பேச கேட்டிருக்கிறன் .

Firmness of soul in man is real excellance; Others are trees, their human form a mere pretence.

L'énergie n'est que l'excès de la finesse de l'esprit. Ceux qui n'en ont pas sont des arbres; ce qui les différencie des vrais arbres c'est leur forme humaine.





Comments