பொருட்பால் - அரசியல் - ஆள்வினைஉடைமை- Manly Effort- l'effort incessant-611 -620.


பொருட்பால் - அரசியல் - ஆள்வினைஉடைமை- Manly Effort-l'effort incessant-611 -620 .

அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் 
பெருமை முயற்சி தரும். 611 

இது செய்வதற்கு முடியாத செயல் என்று சோர்வடையாமல் இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சி அதைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும் .

எனது கருத்து :

இது மட்டும் காணாது. சுத்தி இருக்கிற கூட்டத்தின்ரை கதையளை மண்டையுக்கை போட்டியளோ அவ்வளவுதான். அதாலை உங்கடை மனம் என்ன சொல்லுதோ அதின்படி முடிவு எடுத்தியள் எண்டால் முடியாதது எண்டு ஒண்டும் இல்லை. 

Say not, 'Tis hard', in weak, desponding hour, For strenuous effort gives prevailing power.

Penser toujours à l'exellence de l'entreprise et ne jamais cesser de s'efforcer; l'effort donne la gloire du succès.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612

ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையில் விட்டவரை உலகம் கை விடும். ஆதலால் முயற்சியை கைவிடல் ஆகாது .

எனது கருத்து :

ஒரு அலுவலை செய்ய தொடங்கிற நேரமே ஆயிரம் நொட்டை சொல்லிற சனத்துக்கை ஒரு அலுவலை பாக்கிறதுக்கு தில்லு எண்ட சாமானும் கட்டாயம் வேணும். அப்பிடி தில்லு இருக்கிறவனைத்தான் உலகம் திரும்பி பாக்கும். இல்லாட்டில் அது தன்ரை பாட்டிலை போய்கொண்டு இருக்கும். 

In action be thou, 'ware of act's defeat; The world leaves those who work leave incomplete!

Le monde abandonne celui qui abandonne un travail commencé. Evitez de rester inactif dans l'action.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 
வேளாண்மை என்னும் செருக்கு. 613

பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்னும் சிறந்த பண்பில் நிலைத்திருக்கின்றது .

எனது கருத்து : 

ஊரிலை எங்கடையாக்கள் ஒண்டை சொல்லுவினம், "வெறும் கை முழம் போடுமோ" எண்டு.அதாலை ஏதாவது ஒண்டை செய்தால்தான் மற்றவனுக்கும் உதவி ஒத்தாசை எண்டு இருக்கலாம். 

In strenuous effort doth reside,The power of helping others: noble pride!

La noblesse d'être serviable à tous ne réside que dans la haute qualité appelée effort.

தாள்ஆண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை 
வாள்ஆண்மை போலக் கெடும். 614

முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவிக்கு செய்ய நினைப்பது ,பேடி (கோழை )தன் கையில் வாளை எடுத்து ஆண்மையைக் காட்டுவது போன்றது .

என் கருத்து :

நீங்கள் ஆரோடையும் கூட்டு வையுங்கோ. இந்த வாயாலை வெடி கொளுத்தி போடுறவங்களோடை கூட்டு வைச்சியள் எண்டால் உங்களை ஆரைலையும் காப்பாத்தேலாது .

Beneficent intent in men by whom no strenuous work is wrought, Like battle-axe in sexless being's hand availeth nought.

La serviabilité d'un homme sans effort est inexistante, tout comme l'épée entre les mains d'un eunuque (qui ne peut s'en servir).

இன்பம் விழையான், வினைவிழைவான், தன்கேளிர் 
துன்பம் துடைத்துஊன்றும் தூண். 615

இன்பத்தை விரும்பாதவனாகித் தான் மேற்கொண்ட தொழிலை முடித்தலை விரும்புபவன் தன சுற்றத்தாரது துன்பத்தை ஒழித்து அவர்களைத் தாங்கும் தூண் ஆவான் .

என் கருத்து :

இது இடிக்குது கண்டியளோ . ஒருத்தன் கஸ்ரப்பட மற்றவன் அதிலை குளிர் காயிறது தானே எங்கடை ஜீன் பிரச்சனை . நோகாமல் நொங்கெடுக்காமல் எல்லாரும் சேர்ந்து கஸ்றப்பட்டால்தான் அலுவல் எழுப்பமாய் முடியும் . 

Whose heart delighteth not in pleasure, but in action finds delight, He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.

Celui qui, sans chercher les plaisirs, ne cherche qu'à achever la besogne commencée détruit la misère de ses parents et est la colonne qui les supporte.

முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும். 616

முயற்சி ஒருவனுடைய செலவத்தை பெருகச்செய்யும் .முயற்சி இல்லாமை அவனிடத்து வறுமையைச்சேர்த்துவிடும் 

எனது கருத்து :

வாயாலை வெடி கொழுத்தி போடுறவனிட்டை ஒரு மண்ணும் இருக்காது. ஆனால் கண்டியளோ இப்பிடியான ஆக்களைத்தான் இப்பத்தையான் சனங்கள் நம்புதுகள் .

Effort brings fortune's sure increase, Its absence brings to nothingness.

L'effort accroît la fortune, l'indolence n'engendre que la misère.

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தான்உனான் தாமரையி னாள். 617

ஒருவருடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள்.சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் சிறீ தேவி (திருமகள் ) வாழ்கின்றாள் .

எனது கருத்து :

அப்ப பாருங்கோ வாய் இருக்கிறவன் வங்காளம் போவான் எண்டு ஏன் சொல்லுறவை? 

In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; Where man unslothful toils, she of the lotus flower is there!

La noire déesse de l'infortune réside en la paresse (de l'homme); celle qui est née dans le lotus réside, dit on, en l'effort de celui qui est sans paresse.

பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவு அறிந்து 
ஆள்வினை இன்மை பழி. 618 

நல்வினை இல்லாதிருத்தல் யார்க்கும் பழியன்று .அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பலியாகும் .

எனது கருத்து :

சிலபேரை பாத்தியள் எண்டால் எடுத்ததுக்கு எல்லாம் தங்கடை பிழையளை மற்றவைக்கு மேலை போட்டு புறட்டணியம் படிச்சுக்கொண்டு இருப்பினம். நல்லாய் பாத்தியள் எண்டால் அவை ஒரு துரும்பையும் எடுத்து போட்டிருக்க மாட்டினம். 

'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man!

Ce n'est pas une faute que de n'avoir pas la Bonne Fortune, mais c'est une faute que de s'abstenir de tout effort, lorsqu'on sait toutes qu'il faut savoir.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும். 619

ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போனாலும் ,முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும் .

எனது கருத்து :

ஆனபாட்டிலை ஒழுங்காய் வேலை செய்யாமல் கோயில் குளமெண்டும், சாத்திரம் பரிகாரம் எண்டும் கொஞ்ச கோஸ்ரி திரியும். நீங்கள் நினைக்கிறியளே இதுகள் முன்னேறும் எண்டு? 

Though fate-divine should make your labour vain; Effort its labour's sure reward will gain.

Si une entreprise ne donne pas, grâce à la destinée, tout le profit espéré, l'effort donne toujours le salaire de la peine corporelle.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித் 
தாழாது உஞற்று பவர். 620

மனத்தளர்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் வெற்றி பெரும் முயற்சிக்கு இடையூறாக வரும் விதியையும் வென்று விடுவர் .

எனது கருத்து :

உதெல்லாம் விழல் கதை. நாங்கள் என்ன முயற்சி இல்லாமலே இருந்தம். என்னதான் தலை கீழாய் குத்தி நிண்டாலும், நேரகாலம் சரியில்லை எண்டால் அவ்வளவுதான். இதுக்கு எங்கடை போராட்டத்தை விட என்ன உதாரணம் வேணும் ஐயா?

Who strive with undismayed, unfaltering mind, At length shall leave opposing fate behind.

Ceux qui travaillent sans relâche et ne commettent pas de fautes, voient fuir devant eux même le Destin.






Comments