பொருட்பால்-அரசியல்- இடுக்கண் அழியாமை- Hopefulness in Trouble- Ne pas se laisser abattre par le malheur- 621-630.


பொருட்பால்-அரசியல்-இடுக்கண் அழியாமை- Hopefulness in Trouble-Ne pas se laisser abattre par le malheur-621-630.










இடுக்கண் வருங்கால் நகுக; அதனை 
அடுத்தூர்வது அஃதுஒப்ப தில். 621 

துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் நகைத்து ஒதுங்குக.அத்துன்பத்தை வெல்வதற்கு அதைப்போன்றது வேறு இல்லை .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு கஸ்ரம் துன்பம் வாற நேரம் சிரிச்சு கொண்டு இருக்கவேணும் எண்டு சொல்லுறது எந்த விதத்திலை ஞாயம் எண்டு கேக்கிறன்? மற்றவை லூசன் எண்டு சொல்ல மாட்டினமோ? ஒருத்தனுக்கு ஒரு கஸ்ரம் துன்பம் வந்தால் முதலிலை அதை தீக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கோ எண்டுதான் முதலிலை யோசிக்க வேணும் கண்டியளோ .

Smile, with patient, hopeful heart, in troublous hour; Meet and so vanquish grief; nothing hath equal power.

Quand le malheur arrive, il faut s'en réjouir intérieurement: il n'y a rien de tel pour le réduire.

வெள்ளத்து அணைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும். 622

வெள்ளம் போல் துன்பம் பெருகி வருகிறபோது அறிவுடையவன் அதைப் போக்க நினைக்கும் அளவிலேயே அத்துன்பம் இல்லாமல் ஓடிவிடும் .

எனது கருத்து :

ஒருத்தனுக்கு எதையும் வெல்லலாம் எண்ட தில் இருக்க வேணும் தான், அனால் இந்த ஓவர் தில்லே ஒருகட்டத்துக்கு மேலை சம்பந்தபட்ட ஆளையும் முடிச்சுப்போடும். ஒருத்தனுக்கு தில் மட்டும் காணாது. பிரச்சனயை வெட்டியாடிடுற வழியும் தெரிய வேணும். அப்பதான் அவன்ரை தில் எடுபடும். 

Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone.

Tous les maux qui. comme l'inondation, sont sans bornes, s'évanouissent, lorsqu'un homme intelligent conçoit un projet, (pour les détruire).

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅ தவர். 623 

துன்பம் வரும் போது அதற்காக வருந்திக்கலங்காதவர் அத்துன்பத்துக்கு துன்பம் உண்டாக்கி அதை வென்றுவிடுவர் .

எனது கருத்து :

கடலுக்கை ஒருத்தன் நீந்தி கொண்டிருக்கிற நேரம் சுழி ஒண்டு அவனை இழுக்குது. அவன் சுழியை கண்டு பயப்பிடாமல் கையை காலை அடிச்சால் கரைக்கு வருவான். இல்லையெண்டால் அவனை ஆராலையும் காப்பாத்தேலாது .

Who griefs confront with meek, ungrieving heart,From them griefs, put to grief, depart.

Ceux qui ne s'affligent pas d'un obstacle (qui empêche le succès d'une entreprise) lui créent un contre obstacle.

மடுத்தவாய் எல்லாம் பகடு அண்ணான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624

பார வண்டியை இழுத்துச் செல்லும் எருது தடை நேர்ந்த போதெல்லாம் முயன்று இழுத்துச்செல்லும் .அதைப் போல மனம் கலங்காதவனை அடைந்த துன்பம் துன்பப்பட்டு ஓடும் .

எனது கருத்து :

என்னதான் தலைகீழாய் நிண்டு தண்ணி குடிச்சாலும் , காலமும் வேலை செய்தால்தான் ஒருத்தன் தன்ரை ரூட்டிலை வெல்லுவான் .

Like bullock struggle on through each obstructed way; From such an one will troubles, troubled, roll away.

Les maux qui s'abattent sur celui qui continue son travail malgré les obstacles, comme le buffle qui avance lentement au milieu des cahots, ont en eux-mêmes, la cause de leur destruction.

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற 
இடுக்கண் இடுக்கண் படும். 625

மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும் நெஞ்சம் கலங்காதவன் அடைந்த துன்பம் துன்பப்பட்டுப்போகும் .

எனது கருத்து :

அப்ப அடிக்க அடிக்க அம்மியும் நகரும் எண்டு ஏன் சொல்லுறவை ??

When griefs press on, but fail to crush the patient heart,Then griefs defeated, put to grief, depart.

Les maux qui atteignent en foule, se succédant les uns aux autres, celui qui ne lâche pas prise, sont détruits par d'autres maux.

'அற்றேம்'என்று அல்லற் படுபவோ பெற்றேம் என்று 
ஓம்புதல் தேற்றா தவர்.626

செல்வம் வந்தபோது இதை 'பெற்றோமே' என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த பொது 'இழந்தோமே' என்று வருந்துவார்களோ ?

எனது கருத்து : 

ஒருத்தன்ரை சீவியத்திலை சேமிப்பு எண்டது வேணும். அந்த சேமிப்பு அந்தரம் ஆபத்திலை கைகுடுக்கும். சேமிப்பு இல்லாட்டில் கவலைப்படத்தான் வேணும் .

Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.

Ceux qui ignorent l'avarice dans la prospérité s'affligeront-ils de leur pauvreté dans le malheur ?

இலக்கம் உடம்பு இடும்பைக்குஎன்று கலக்கத்தைக் 
கையாறாக் கொள்ளாதாம் மேல்.627

மேலோர் ,தம் உடம்பு துன்பத்துக்கு இலக்கானது என்று அறிந்து,துன்பம் வந்தபோது அதற்காக வருந்த மாட்டார்கள் .

எனது கருத்து :

அப்பிடி ஆரும் இருந்தால் காட்டுங்கோ. ஒரு சின்ன பிரச்சனைக்கே அதை ஊதி பெருப்பிச்சு தலைகீழாய் நிக்கறவை தான் இந்தக்காலத்திலை கூட .

'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects.

L'homme intelligent qui sait que le corps sert de cible à la douleur, ne considère pas celle-ci comme telle.

இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் 
துன்பம் உறுதல் இலன்.628

இன்பமானத்தை விரும்பாதவனாய் ,துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் ,துன்பம் வந்த போது வருந்த மாட்டான் .

எனது கருத்து :

உண்மைதான் ஐயா. ஆனால் இப்ப அப்பிடியெல்லாம் இல்லை. தனக்கு வாற துன்பங்களை சனத்துக்கு காட்டி அரசியல் செய்யிற அரசியல்வாதியள் கூடின காலம் இப்ப .

He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes.

Celui qui ne désire pas les plaisirs et qui sait qu'il est naturel d'endurer les maux causés par le Destin, ne souffre jamais de ces maux.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் 
துன்பம் உறுதல் இலன்.629

இன்பம் வரும் போது மகிழ்ச்சி அடையாதவன்,துன்பம் வந்தபோது அத்துன்பத்தைக் கண்டு வருந்த மாட்டான் .

எனது கருத்து :

நல்லாய் இருக்கிற நேரம் கண்கடை தெரியாமல் தலைகீழாய் ஆடுறவையும், கெட்டு நொந்து போய் இருக்கிறநேரம் தங்களை வெளியாலை காட்ட வெக்கப்படுறவையும் தான் இப்ப கூட கண்டியளோ .

Mid joys he yields not heart to joys' control. Mid sorrows, sorrow cannot touch his soul.

Celui qui jouit, mais sans les désirer, des plaisirs qui lui échoient, supporte la douleur quand elle vient, mais n'en souffre pas.

இன்னாமை இன்பம் எனக்கொளின், ஆகும்தன் 
ஒன்னார் விழையும் சிறப்பு.630

ஒருவன் துன்பத்தையே தனக்கு கிடைத்த இன்பமாக கருதினால் அவனுடைய பகைவரும் அவனைச் சிறப்புடன் விரும்புவர் .

எனது கருத்து :

அப்பிடியெண்டால் சிங்களம் விடுதலை புலிகளை போற்றிப் பாடிக்கொண்டு அல்லோ ஐயா இருக்கவேணும் ?

Who pain as pleasure takes, he shall acquire The bliss to which his foes in vain aspire.

Celui qui supporte joyeusement la fatigue de l'effort, atteint la gloire qui le fait exalter par ses ennemis.


Comments